Consumer Protection Act 2019 -நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019
இதற்கு முந்திய பதிவிற்கு spotify podcast Soundbits on Law நிகழ்ச்சிக்கு
தங்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரியவந்தது ஆனால் அந்தப் பதிவில் இருந்து எழக்கூடிய கேள்விகளை அனைவரும் டெக்ஸ்ட் மெசேஜா தான் அனுப்பி உள்ளார்கள் யாரும் voice message ஆக அனுப்பவில்லை இருப்பினும் இந்த பதிவின் முற்பகுதியில் அந்த டெக்ஸ்ட் மெசேஜில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
1. எனது அக்கா எனக்காக தனது Amzon அக்கவுண்டில் இருந்து மிக்ஸி ஒன்றை வாங்கி அன்பளித்தார் அதில் கோளாறு ஏற்படும் போது அது குறித்த புகாரை எனது அக்கா கொடுக்க வேண்டுமா அல்லது நான் கொடுக்க வேண்டுமா? நல்ல கேள்வி நீங்கள் உங்களுடைய நலனுக்காக தான் உங்கள் அக்கா வாங்கி இருக்கும் பொழுது அவர் விலை கொடுத்து வாங்கினார் என்பதற்கான விலைப்பட்டியல் இருந்தால் போதும் நீங்கள் வழக்கை நடத்தினால் மேலும் உங்கள் முகவரிக்கு அந்த மிக்ஸி டெலிவரி ஆன ஆதாரம் இருந்தால் போதுமானது.
2. வங்கியில் எனது சித்தப்பா ரொக்கமாக வைப்பீடு செய்து விட்டு இறந்து விட்டார் அவருக்கு எனது அப்பா மற்றும் அத்தை வாரிசலாக உள்ளார்கள் என்னை நாமினியாக நியமித்து விட்டு சென்று விட்டார் எனது அத்தைதான் வாரிசு என்று வங்கிக்கு எதிர்ப்பு தெரிவித்ததை முன்னிட்டு வங்கி எனக்கு டெபாசிட் பணத்தை தர மறுக்கிறது? (எனது அத்தை ஒரு வளர்ப்பு மகள் முறைப்படி சுவிகாரம் எடுக்கப்படவில்லை) இந்த வழக்கில் உங்கள் அத்தையையும் ஒரு தரப்பினராக சேர்த்தி நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் உங்கள் அத்தை ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து அதில் ஒரு இடைக்கால மனு செய்து அதன் பேரில் நீதிமன்றம் வங்கியை பணம் கொடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கும் வரை நீங்கள் அந்த வைப்பீடு தொகையை பெறலாம் ஆனால் உங்கள் அத்தையோ அல்லது அத்தையின் வாரிசுகளோ, சுவிகாரம் சரியானது என விதிவிக்கும் பட்சத்தில் அத்தை கூறிய பங்கை நீங்கள் உங்கள் சித்தப்பாவின் ஏஜெண்டாக பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வங்கி வைப்பீடு தொகையை nominee கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது இதுவே ஆர்பிஐ கொடுத்துள்ள வழிகாட்டியாகும். Sources:- Section 45ZC of Banking Regulation Act 1949 and Circular by RBI dated 09.06.2005
எனது தாயார் என் பெயரில் செய்த வாய்ப்பீட்டுத் தொகைக்கு எனது தாய் மாமாவை நாமினி என நியமித்திருந்தார் எனது தாயார் முதலில் இறந்து விட்டார் பிறகு எனது மாமா வைப்பிட்டுத் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்து இரண்டு நாட்களில் இறந்து விட்டார் இப்பொழுது எனது மாமாவின் வாரிசுகளுக்கு அந்த வைப்பீடு தொகை கொடுக்கப்படுமா நான் நேரடியாக அந்த வழிப்பாட்டு தொகையை வாங்க முடியாதா?இந்த கேள்வியில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்த வைப்பீட்டுத் தொகை உங்க மாமாவிற்கு ஏதோ சொந்தம் போல நீங்கள் புரிந்து கொண்டீர்கள் நாமினி என்பவர் அந்த வைப்பிட்டு தொகைக்கு உரிமையாளர் அல்ல அவர் இறந்தவரின் வாரிசுகளின் அறங்காவலராக அந்த வைப்பீட்டுத் தொகையை வைத்திருக்க வேண்டும் நாமினி இறக்கும் பட்சத்தில் அசல் வைப்பீட்டு தர வாரிசுகள் மட்டுமே அந்த வைப்பீட்டுத் தொகையை பெற இயலும் நாமினியின் வாரிசுகள் மற்றபடி எந்த உரிமையும் கொண்டாட முடியாது.
எனக்கு அடிக்கடி மார்க்கெட்டிங் கால்ஸ் வருகிறது இது தொந்தரவாக உள்ளது இது குறித்து என்ன செய்வது, நான்DND முறையில் பதிவு செய்து விட்டேன்? நல்லது இங்கு எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு தொந்தரவு தான் அந்த கால் செய்றவங்க அந்த கமர்சியல் மார்க்கெட்டிங் நம்பர் சொல்லக்கூடிய 16 அப்படின்னு தொடங்கக்கூடிய எண்ணில் இருந்து உங்களுக்கு போன் செஞ்சாங்கன்னா உங்களுடைய தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்துக்குக்கு நீங்க புகாரை கொடுக்கலாம். தனி நபர் எண்களில் இருந்து வந்தால் நீங்கள் உங்களுடைய எண்களை ஏதேனும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து அவர்கள் பெற்றிருப்பார்கள். உதாரணமா நீங்க ஒரு ஹாஸ்பிடல்ல போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கறீங்க அந்த ட்ரீட்மென்ட் சம்பந்தமா அந்த மார்க்கெட்டிங் கால் வந்தா நீங்க அந்த ஹாஸ்பிடல் மேல நடவடிக்கை எடுக்கலாம் அதே மாதிரி கார் சர்வீஸ் பண்ண போறீங்க கார் சர்வீஸ் சென்டர்ல வந்து அந்த நம்பர் திருப்பி திருப்பி உங்களுக்கு வந்தா நீங்க உங்க பேர்ல நடவடிக்கை எடுக்கலாம். இந்த விஷயத்துல தெளிவா சொல்ல போனோம்னா இந்த புகார் அளிக்கக்கூடிய 1909 என்கின்ற அந்த எண் வந்து மக்களுக்கு பயன் அளிக்கவில்லை அதைப்பற்றி நிறைய புகார் வருகிறது, அது குறித்து ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்வதற்காக நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்செய்து வருகிறோம். புதிதாக ஏற்றப்பட்டுள்ள telecom Act 2023 பிரிவு 30 இது சம்பந்தமாக வழி வகைகளை செய்கிறது அது தற்சமயம் தான் அவளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வெட்டப்படும் என நம்புகிறோம்.
Gopa kumar vs Oriental Insurance company ltd என்ற வழக்கில் insurance ombudsman compensation கொடுக்க முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஆகையால் மேற்படி காப்பீடு சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு சம்பந்தப்பட்ட துறை ரீதியான குறை தீர்ப்பு ஆணையத்திற்கு செல்லலாமா? அந்தத் தீர்ப்பில் பிழை உள்ளது மேலும் அந்தத் தீர்ப்பு நமது மாநிலத்திற்கு பொருந்தாது என்ற ஒரு சட்ட நிலை உள்ளது.
அந்நிய செலாவணி ஊக பேர வர்த்தகத்திற்காக ( Forex trading ) நான் முதலீடு செய்த வகையில் ஏமாந்து விட்டேன் அது குறித்து நான் நுகர்வோர் தீர்ப்பானையத்தில் பரிகாரம் தேட முடியுமா? முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நுகர்வோர் தீர்ப்பானையத்தில் பரிகாரம் தர முடியாது.
நான் சிங்கப்பூர் விமான நிலையத்தில் உள்ள வளாகத்தில் ஒரு suit case ஒன்றை வாங்கினேன் அதன் பூட்டு உடைந்து விட்டது அது குறித்து இங்கு நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? பன்னாட்டு உத்திரவாதம் பெற்ற பொருள்கள் குறித்து நம் நாட்டில் நீங்கள் குடியிருக்கும் ஊருக்கு உண்டான மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் மேலும் தாங்கள் வாங்கிய பயணப்பெட்டி சூட்கேஸ் செய்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வந்திருக்க வேண்டும். மற்றபடி வெளிநாடுகளில் நடக்கும் நுகர்வோர் நடவடிக்கைகளுக்கு இந்திய நுகர்வோர் சட்டம் 2019 பொருந்தாது.
நான் கர்நாடக மாநிலம் மூகாம்பிகா கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பங்குமிடத்தில் ஒரு நாள் இரவு தங்குவதற்கான வசதியை பெறுவதற்கான கட்டடம் செலுத்தி இருந்தேன் அவர்கள் அந்த பணத்தைப் பெற்று எனக்கு உரிய வசதி செய்து தரவில்லை என்னால் கர்நாடகா மாநிலம் குந்தாப்புரா வரை சென்று வழக்கு தாக்கல் செய்ய முடியாது இதற்கு ஏதேனும் வழி உண்டா? நீங்கள் உங்கள் சொந்த ஊரில் குரிய மாவட்ட ஒருவர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடரலாம் மேலும் இந்த நிலை பல மத வழிபாட்டுத் தலங்களில் நிலவுகிறது இது சம்பந்தமாக ஒரு ஒரு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் public utility என மாநில அரசு வழிபாட்டு தலங்களை அறிவித்தால் நுகர்வோர் உரிமை மேலும் பாதுகாக்கப்படும்.
எங்கள் அப்பார்ட்மெண்ட்ஸை ஒட்டி இருக்கக்கூடிய கேஸ் கம்பெனியிலிருந்து எங்களுக்கு டெலிவரி கொடுப்பதற்கு 25 ரூபாய் விலைப்பட்டியலுக்கு மேல் கேட்கிறார்கள் இது சரியா?
உங்கள் சமையல் வாய்வு இணைப்பிற்கு பட்டியலுக்கு மேல் அவர்கள் கேட்கும் தொகை அந்த சமையல் வாய்வு பெட்டகத்தை உங்கள் வீட்டிற்கு தூக்கி வருவதற்கான கூலியாகும் நீங்கள் உங்கள் செலவில் கேஸ் சிலிண்டரை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடிந்தால் அந்த கூடுதலான தொகையான ரூபாய் 25 தவிர்க்கலாம் அதை மீறி கேஸ் விநியோகஸ்தர் கட்டணம் கேட்டால் அது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குற்றமாகும்.
நான் முத்திரைத்தாள் வாங்கும் பொழுது முத்திரைத்தாள் விநியோகஸ்தர் முத்திரைத்தாளின் முகவிளைக்கு மேல் அதிக பணம் கேட்கிறார் அது சரியா?
முத்திரைத்தாள் விநியோகஸ்தர் முத்திரைத்தாளின் முகவரிக்கு மேல் அதிக பணம் கேட்டால் அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தகுந்த செயலாகும்.
நாங்கள் எடுத்த வில்லங்கச் சான்றிதழில் நீதிமன்ற பினை கொடுக்கப்படவில்லை ஆனால் பதிவாளரின் புத்தகங்களில் நீதிமன்றப்பிணை பதிவாகி இருந்தது இது நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா?
தற்சமயம் கணினிமயமாக்கப்பட்டதால் இந்த மாதிரி பிழைகள் எதுவும் ஏற்படுவதில்லை நியாயமாக்கப்பட்டதற்கு முன்பு ஏற்பட்டிருந்த பினையுங்கள் சில சமயங்களில் வில்லங்கச் சான்றிதழில் பிரதிபலிக்காமல் இருக்கலாம் இதை அரசாங்கம் தவறான ஒரு பணி என ஒற்றுக்கொள்ளாமல் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று வாதிட்டு வருகிறது ஆனால் உண்மையில் இதுவும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய தகுந்த செயலாகும்
Comments
Post a Comment